ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட அளவை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்!
சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க!
மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான். சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்!
வான சாஸ்திரி, பூகோள சாஸ்திரி, தத்துவவாதி, கவிஞன், சரித்திர ஆசிரியர், கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்... அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா? நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க.
ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இருக்குமாம். ஆனா, அதே நாளுலயும் அதே நேரத்துலயும், அலெக்சாண்டிரியாவுல ஒரு குச்சியை நட்டு வச்சா நிழல் விழுந்துச்சாம்.
மத்தவங்க இத பெருசா எடுத்துக்கலை. ஆனா எரடோஸ்தனிஸ் இதுல ஒரு பெரிய ரகசியத்தை கண்டுபிடிச்சுட்டான்!
அவன் யோசிச்சான்:
பூமி தட்டையா இருந்தா, சூரிய வெளிச்சம் ரெண்டு குச்சியிலயும் ஒரே மாதிரிதானே விழுகும்? அப்போ நிழலும் ஒரே மாதிரிதானே இருக்கணும்? ஆனா அது வேற வேற மாதிரி இருக்கே!
இதுக்கு என்ன காரணம்?
பூமி வளைஞ்சிருக்கறது மட்டும்தான் காரணம்!
அலெக்சாண்டிரியாவுல விழுந்த நிழலோட கோணத்தை அவன் அளந்தான். அது சரியா 7 டிகிரியாம். அதாவது ஒரு வட்டத்துல 1/50 பங்கு!
சியென்னேவுக்கும் அலெக்சாண்டிரியாவுக்கும் நடுவுல இருக்கற தூரத்தை அளக்க ஒருத்தரை அனுப்பினான்: அது கிட்டத்திட்ட 800 கிலோமீட்டர் இருந்துச்சாம்.
அப்புறம் அவன் கணக்குப் போட்டான்:
800 கி.மீ. × 50 = 40,000 கி.மீ. – இதுதான் பூமியோட சுற்றளவு!
ஆச்சரியமா இருக்குல்ல? அவன் போட்ட கணக்கு எவ்வளவு துல்லியமா இருந்துச்சுன்னு பாருங்க!
அவன் கிட்ட செயற்கைக்கோள் இல்ல. டெலஸ்கோப் இல்ல. கால்குலேட்டர் இல்ல.
ஆனா அவன்கிட்ட இருந்தது என்ன? நல்லா கவனிச்சான், ஏன் ஏதுன்னு கேள்வி கேட்டான். அவ்வளவுதான்!
ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட சைஸை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்!
©️ Jegan
#பூமி #அறிவியல் #வரலாறு #ஆச்சரியம் #தமிழ்தேசம் #சயின்ஸ் #அலெக்சாண்டிரியா #எரடோஸ்தனிஸ் #நிழல் #குச்சி #கணிதம் #வானியல் #புவியியல் #தத்துவம் #கவிதை #நூலகம் #அறிவு #முயற்சி #வெற்றி #சாதனை #jegan # ஜெகன்
கருத்துகள்
கருத்துரையிடுக