முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

1 சாமுவேல் விளக்கவுரை - Holy Bible Tamil

 1 சாமுவேல் விளக்கவுரை

1 சாமுவேல்: ராஜ்யம் நிலைநாட்டப்படுதல்

வாசிக்க வேண்டிய அதிகாரங்கள் : 1-4, 7-13, 15-18, 20, 21, 23-25, 27, 28, 31.

தலைப்பு

1 சாமுவேல் என்ற இப்புத்தகம், கடைசி நியாயாதிபதியும், ராஜாக்களை ஏற்படுத்திய மாபெரும் மனிதருமான சாமுவேலின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது (இவர் இஸ்ரவேலின் முதல் இரு அரசர்களான: சவுல் மற்றும் தாவீது ஆகியோரை அபிஷேகம் பண்ணினார்). தொடக்கத்தில் 1 மற்றும் 2 சாமுவேல் என்ற புத்தகங்கள் ஒரு புத்தகமாகவே இருந்தது, இது 1 இராஜாக்கள் என்று அழைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் செப்துவஜிந்த் மொழி பெயர்ப்பு உண்டாக்கப்பட்டபோது, இப்புத்தகங்கள் பிரிக்கப்பட்டன. “சாமுவேல்” என்றால் “தேவனிடத்தில் கேட்கப்பட்டவர்” என்று அர்த்தமாகும் (1:20).

பின்னணி

இப்புத்தகம், நியாயாதிபதிகளின் ஆட்சியில் இருந்து ராஜாக்களின் ஆளுகைக்கு மாறுதல் பற்றி கூறுகிறது. பிரதான ஆசாரியரான ஏலி, சாமுவேல் ஆகிய இருவருமே நியாயாதிபதிகளாக இருந்தனர் (4:18; 7:15). சாமுவேல் ஒரு மாபெரும் மனிதராய் இருந்தார். அவர் ஒரு ஆசாரியராகவும் நியாயாதிபதி யாகவும் இருந்ததுடன் கூடுதலாக, முதன்முதலான வாய் மொழித்தீர்க்கதரிசி என்றும் அறியப்பட்டு இருந்தார் (3:20, 21; 4:1அ).

இருப்பினும், மக்கள் தங்களைச் சுற்றிலும் இருந்த மற்ற இனத்தவர்கள் கொண்டிருந்ததுபோலத் தங்களுக்கும் ஒரு அரசன் வேண்டும் என்று விரும்பினர் (8:5), இது சாமுவேலையும் (தேவபக்தியற்ற அவரது மகன்களையும்) புறக்கணித்தல் என்பதைவிட தேவனுடைய ராஜரீகத்தையே அதிகமாய்ப் புறக்கணித்தலாக இருந்தது (8:7). மக்கள் பூமிக்குரிய அரசரைக் கொண்டிருத்தலில் உண்டாகும் விளைவுகள் பற்றி எச்சரிக்கப்பட்டனர், ஆனாலும் அவர்கள் இன்னமும் தங்களுக்கு ஒரு அரசன் வேண்டுமென்று கூக்குரலிட்டனர் (8:10- 22). அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகச் சிறந்ததைத் தேவன் அவர்களுக்குத் தந்து அருளினார்.

இப்புத்தகத்தின் பெரும்பகுதியானது, சமஸ்த இஸ்ரவேல்மீதும் முதல் அரசராக, சாமுவேலினால் அபிஷேகம் செய்விக்கப்பட்ட சவுலைப் பற்றிக் கூறுகிறது. தொடக்கத்தில் சவுல், ஒரு தாழ்மையான இளைஞராகவே இருந்தார், ஆனால் விரைவிலேயே அவர் தேவனுடைய கட்டளைகளைப் பொறுத்தம ட்டிலும்கூட, தாம் விரும்பியபடியெல்லாம் செய்யலாம் என்ற உணர்வுகொண்ட மேட்டிமைநிறைந்த ஆட்சியாளர் ஆனார். தேவன் அவரை ஒரு ராஜாவாக இராதபடிப் புறக்கணித்தார், மற்றும் அடுத்த அரசராய் இருக்கும்படி எதி ர்பார்க்கப்பட்ட தாவீது என்ற இளைஞர், சாமுவேலினால் அபிஷேகம் செய்விக்கப்பட்டார். இப்புத்தகத்தின் கடைசிப் பகுதியானது தாவீதின் எழுச்சி மற்றும் சவுலின் வீழ்ச்சி ஆகியவற்றைப் பற்றிப் கூறுகிறது. (தாவீதின் சங்கீதங்களில் பெரும்பான்மையானவை அனேகமாக இந்த இடர்ப்பாடு மிக்க வேளையில் எழுதப்பட்டிருக்கலாம்; சங்கீதம் 37ஐக் கவனிக்கவும்.) இப்புத்தகம் சவுலின் தற்கொலை பற்றிய கவலைமிக்க குறிப்புடன் முடிகிறது.

இந்தத் தொகுதியின் பெரும்பான்மையான பகுதியை அனேகமாக சாமுவேல் எழுதியிருக்கலாம் (10:25; 1 நாளாகமம் 29:29 ஆகியவற்றைக் கவனிக்கவும்). அவர் எழுதியிருந்தார் என்றால், அவரது மரணத்திற்குப் பிந்திய பகுதியானது (25:1) வேறு யாரேனும் ஒருவரால், அனேகமாக தீர்க்கதரிசிகளான நாத்தான் மற்றும் காத் ஆகியோரால் (1 நாளாகமம் 29:29) எழுதப்பட்டிருந்தது.

வரைகுறிப்பு

  1. ராஜாக்களை ஏற்படுத்திய மாமனிதர்: சாமுவேல் (1-8).
  2. சாமுவேலின் தொடக்ககால வாழ்வு (1-3).
  • சாமுவேலின் பிறப்பு (1:1-2:11).
  • சாமுவேலின் வளர்ச்சியும் அதனுடன் முரண்பட்ட ஏலியின் தோல்வியும் (2:12-36).
  • சாமுவேலின் தீர்க்கதரிசன அழைப்பு (3).
  1. இன்னொரு சுழற்சி (4-7).
  • பெலிஸ்தர்களின் அடக்குமுறை (4:1-7:2).
  • மனந்திரும்புதலும் விடுதலையும் (7:3-17). சாமுவேல் நியாயாதிபதியாய் இருக்கின்றார்.
  1. சாமுவேல் புறக்கணிக்கப்படுகின்றார்; மக்கள் ஒரு அரசர் வேண்டு மென்று விரும்புகின்றனர் (8).

II  சமஸ்த இஸ்ரவேல் நாடு முழுவதற்கும் முதல் அரசர்: சவுல் (9-31).

  • சவுல் அபிஷேகிக்கப்படுகின்றார் மற்றும் சாமுவேல் புறக்கணிக்கப்படுகின்றார் (9-12).
  • சவுலின் வீழ்ச்சி (13-15).
  • தாவீதின் எழுச்சி (16:1-18:9)
  • தாவீது துன்புறுத்தப்படுதல் (18:10-27:12) மற்றும் சாமுவேலின் மரணம் (25:1).
  • சவுலின் கடைசிநாட்களும் மரணமும் (28-31).

1 சாமுவேல் புத்தகத்தில் இருந்து பாடங்கள்

ஒரு நல்ல மனிதராகவும் அதேவேளையில் ஒரு மோசமான தந்தையாகவும்இருப்பதற்குச் சாத்தியமுள்ளது. இதற்கு ஏலி ஒரு உதாரணமாக இருக்கின்றார் (2:12, 17, 22). அவர் தமது மகன்கள் செய்து கொண்டிருந்தவற்றைக் கவனிக்க வில்லை. அவர்களின் செயல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு அவர் மிகவும் காலம் தாழ்த்தினார். அவர்களை அவர் ஒழுங்குபடுத்த முயற்சி செய்தபோது, அவர் போதிய அளவுக்கு உறுதி வாய்ந்தவராக இருக்கவில்லை (3:13). சாமுவேல் இன்னொரு உதாரணமாக இருக்கின்றார் (8:2, 3). அவர் அனேகமாகத் தமக்குத் தாமே நற்செயல்களைச் செய்வதில் பணிமும்முரமாயிருந்து, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்பதைக் கவனிக்க இயலாமற்போய், தமது பிள்ளைகளை இழந்து போயிருக்கலாம்.

சவுல் “தன்னையே முட்டாளாக்கிக்கொண்ட மனிதனுக்கு” மிகச் சிறந்த உதாரணமாக உள்ளார் (26:21). அவர் குறைந்தபட்சம் சாவுக்கேதுவான ஆறு தவறுகளைச் செய்தார்: பொறுமையின்மை (13), அவசரம் (14), சுயசித்தம் (15), பொறாமை (18:8, 9), கடைசியும் நிறைவுமான கீழ்ப்படியாமை (28), மற்றும் தற்கொலை (31:4). உண்மையான மனம் வருந்துதலும் வாழ்வில் மாற்றமும் இன்றி, “நான் பாவம் செய்தேன்,” என்று கூறுவது ஒரு மனிதருக்குச் சாத்திய மாகவே உள்ளது (26:21),

தேவன் மனிதரின் வெளித்தோற்றத்தையல்ல, ஆனால் இருதயத்தைப் பார்க்கின்றார் (16:7). ஒரு ஊழியக்காரன் “தம்முடைய (தேவனுடைய) இருதயத்திற்கு ஏற்ற மனிதராய்” இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகின்றார் (13:14; நடபடிகள் 13:22ஐக் காணவும்).

இயேசு புதிய ஏற்பாட்டில், கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்றார். “கிறிஸ்து” என்பது “அபிஷேகம்பெற்ற ஒருவர்” என்பதற்கான கிரேக்கக் சொல்லாகும். “மேசியா” என்பது “அபிஷேகம்பெற்றவர்” என்பதற்கான பழைய ஏற்பாட்டுச் சொல்லாகும்; இவ்வார்த்தை 2:10ல் முதன்முதலாகக் காணப்படுகிறது. ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளைப் பிரதிஷ்டை செய்வதற்கு/பணிய மர்த்துவதற்கு அபிஷேகம் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அபிஷேகம் செய்யப்படுதலினால் அரசர்கள் தனிப்படப் பிரித்துவைக்கப்பட்டனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது (10:1; 16:13). சவுல், “கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்” என்று அழைக்கப்பட்டார் (24:6; 26:9, 11), இது “கர்த்தருடைய மேசியா” என்ற நேரடி அர்த்தம் உடையதாகும். யூதர்கள் மேசியாவை எதிர்நோக்கியிருந்தபோது அவர் வேறு எப்படியிருப்பதைக் காட்டிலும் அதிகமாக, ஒரு அரசராய் இருக்க வேண்டும் என்றே எதிர் பார்த்தனர்.

ராட்சதர்களுடன் போரிடுதல் பற்றி நினைவில் வைக்க வேண்டிய ஏழு விஷயங்கள் (1 சாமுவேல் 17)

நாம் யாவருமே நமது வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய ராட்சதர்களைக் கொண்டுள்ளோம்: மக்கள், வற்புறுத்துதல்கள், கவலைகள் மற்றும் பயங்கள். எனக்கு ராட்சதனாக இருப்பது உங்களுக்கு ராட்சதனாகக் காணப்படாதிருக் கலாம், ஆனால் அது இன்னமும் எனக்கு மிக உண்மையானதாகவே உள்ளது- அது எதிர்கொள்ளப்பட வேண்டும்.

வாழ்வின் கோலியாத்துகளை நாம் எவ்வாறு தோல்வியுறச் செய்ய முடியும்?

1 சாமுவேல் 17ல், நாம் ராட்சதர்களுடன் போரிடுதல் பற்றி நினைவில் வைக்க வேண்டிய ஏழு விஷயங்களைக் காண்கிறோம்.

  1. ராட்சதர்களை நீங்கள் எதிர்பாராமல் இருக்கும்பொழுது அவர்கள்தோன்றுகின்றார்கள்.
  2. தாவீது ராட்சதர்களுடன் போராடுவதற்காக அல்ல, ஆனால் தமது சகோதரர்களைக் காண்பதற்காகவே வந்தார்.
  • கோலியாத், இஸ்ரவேல் மக்களின் படைக்கு அறைகூவல் விடுக்கின்றான் (17:1-11, 16).
  • தாவீது தமது சகோதரர்களை நலம் விசாரிக்கும்படி அனுப்பப் படுகின்றார் (17:12-19).
  • தாவீது அங்கு சென்றபோது, அவர் கோலியாத்தைக் காணுகின்றார் (17:20-23).
  1. நீங்கள் பின்வரும் கருத்தை நிச்சயப்படுத்த முடியும்: விரைவிலோ அல்லது தாமதமாகவோ, நீங்கள் உங்கள் ராட்சதனை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
  2. நீங்கள் ராட்சதர்களைப் பயத்துடனோ அல்லது விசுவாசத்துடனோ எதிர் கொள்ளமுடியும்.
  3. படைவீரர்களுக்கும் தாவீதுக்கும் இடையில் இருந்த நேரெதிரான

இயல்பைக் கவனியுங்கள்.

  • இஸ்ரவேலின் மனிதர்கள் பயமடைந்திருந்தனர் (17:24).
  • தேவனுடைய நாமம் தூஷிக்கப்பட்டதால் தாவீது சினமுற்றி ருந்தார். மாபெரும் ஊக்கப் பரிசுகள் வாக்களிக்கப்பட்டன, ஆனால் தாவீது அந்தபலன்களின்மீது ஆர்வம் கொண்டிருக்க வில்லை; அவர் தமது தேவனுடைய கனம் பற்றிக் கவலையாய் இருந்தார் (17:25-27).
  1. நாம் நமது வாழ்வில் ராட்சதர்களால் மூழ்கடிக்கப்படக் கூடும் – அல்லது அவர்களை நாம் தேவனை மகிமைப்படுத்துவதற்கான வாய்ப்பாகக் காணக்கூடும்.

III.  உங்களை உற்சாகமிழக்கச் செய்வதற்கு யாரேனும் ஒருவர் எப்பொழுதும் தயாராக இருப்பார்.

  1. பல மனிதர்கள் தாவீதைக் கீழே நிறுத்த (தடைசெய்ய) முயற் சித்தனர்.
  • தாவீதின் சகோதரன் (17:28, 30).
  • சவுல் (17:31-37).
  • கோலியாத் (17:43).
  1. “உங்களால் அதைச் செய்ய முடியாது” என்று மக்கள் கூறினால், திகைப்படைய வேண்டாம்!
  2. உங்கள் ராட்சதர்களை நீங்கள் சந்திக்கும் முன்பாகவே நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
  3. கோலியாத் காணப்பட்டபோது, தாவீது தயாராக இருந்தார். அவர் ஆயத்தம் செய்திருந்தார்:
  • சிங்கங்களுடனும் கரடிகளுடனும் போராடியிருந்தார் (17:34- 36).
  • மேய்ப்பனின் வயலில் தனிமையில் தமது விசுவாசத்தை மேம் படுத்தியிருந்தார் (17:37; 16ம் அதிகாரத்தைக் காணவும்).
  1. வாழ்வின் சிறு பிரச்சனைகளைச் சந்திப்பதன்மூலம் – தேவனுடைய உதவியுடன் – நீங்கள் வாழ்வின் பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கத் தயாராகின்றீர்கள்.
  2. உங்களால் இயன்ற அளவு சிறப்பாகத் தயார்செய்துகொண்டு;  பின்பு தேவனைச் சார்ந்திருங்கள்.
  3. தாவீது தம்மீது அல்ல, ஆனால் தேவன்மீதே நம்பிக்கை வைத்தி ருந்தார்.
  • அவர் தமது பயிற்சியின்மீது நம்பிக்கை கொண்டிருந்தார் (17:38, 39).
  • அவர் தமது கருவிகள்மீது நம்பிக்கை கொண்டிருந்தார். (17:40).
  • எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தேவன்மீது நம்பிக்கை வைத் திருந்தார்.
    • கோலியாத்தின் அறைகூவல் (17:41-44).
    • நம்பிக்கை பற்றி தாவீதின் மாபெரும் சொல்விளக்கம் (17:45-47).
  1. விரைவிலேயோ அல்லது தாமதமாகவோ நீங்கள் தனியே நின்று வெற்றி கொள்ள இயலாத ஒரு ராட்சதனை நீங்கள் எதிர்கொள் வீர்கள். தேவனுடனான உங்கள் உறவைச் செயல்படுத்துங்கள்.
  2. நீங்கள் ராட்சதர்களைக் கொண்டிருந்தால்,  உடனடியாக எதிர்த்து நில் லுங்கள்.
  • தாவீது கோலியாத்தைச் சந்திப்பதற்கு ஓடினார் (17:48), மற்றும் வெற்றி அவருடையதாக இருந்தது (17:49-51)!
  • உங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளுவதை நீங்கள் எவ்வளவு அதிகம் தள்ளிப் போடுகின்றீர்களோ, அவ்வளவுக்கு அவைகள் பெரிதாகின்றன.

VII  ஒரு வெற்றி இன்னொரு வெற்றிக்கு ஆயத்தம் செய்கிறது.

  1. தாவீதின் வெற்றி மற்றவர்களுக்கு – மற்றும் அவருக்கேகூட உதவிற்று.
  • இஸ்ரவேல் மக்களின் படை அதன்பின்பு தைரியத்தால் நிரம் பிற்று (17:51-53).
  • இப்போது தாவீது, பிந்திய யுத்தங்களுக்காகத் தமது விசுவா சத்தைப் பெலப்படுத்தும் அனுபவம் கொண்டிருந்தார் (17:54).
  1. ஒரு யுத்தத்தை வெற்றிகொள்ள உங்களுக்குத் தேவன் உதவுகின்ற ஒவ்வொரு முறையும், பின்வரும் சத்தியத்தை உங்கள் இருதயத்தில் செதுக்கி வையுங்கள். எதிர்கால யுத்தங்களில் (இதைவிட) அதிக மான பெலத்தை உங்களுக்கு வேறெதுவும் தராது!

முடிவுரை

உங்கள் வாழ்வில் நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளுகையில், நீங்கள் பலத்திற்காகத் தேவனைச் சார்ந்திருக்க முடியும். உங்கள் போராட்டங்களை எதிர்கொண்டு அவற்றை மேற்கொள்ளும்படிக்கு நீங்கள் தயாராயிருப்பதற்கு அன்றாடம் உங்கள் விசுவாசத்தைக் கட்டியெழுப்புங்கள். ஒவ்வொரு வெற்றியும் உங்களை அடுத்த போராட்டத்திற்குப் பெலப்படுத்தும்.


HOLY BIBLE TAMIL | +919444888727 | CHENNAI-48

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil Bible Picture - தமிழ் வேதாகமம் ( தமிழ் பைபிள் 66 ஆகமங்கள் )

Genesis in Tamil Bible - ஆதியாகமம் தமிழ் வேதாகமம் Tamil Bible Exodus - யாத்திராகமம் தமிழ் வேதாகமம் Levity in Tamil Bible - லேவியராகமம் வேதாகமம் Numbers in Tamil Bible - எண்ணாகமம் தமிழ் வேதாகமம் Ubagamam in Tamil Bible - உபாகமமம் தமிழ் வேதாகமம் Tamil Bible - Judges நியாயாதிபதிகள் தமிழ் வேதாகமம் Ruth in Tamil Bible - ரூத் தமிழ் வேதாகமம் ISamuel in Tamil Bible | 1 சாமுவல் தமிழ் வேதாகமம் 2 Samuel in Tamil Bible - 2 சாமுவேல் தமிழ் வேதாகமம் 1 Deuteronomy in Tamilbible - 1 நாளாகமம் தமிழ் வேதாகமம் Joshua in Tamil Bible -  தமிழ் வேதாகமம் 2 Deuteronomy in Tamil Bible - 2 நாளாகமம் தமிழ் வேதாகமம் 1 Kings in Tamil Bible - 1 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் 2 Kings in Tamil Bible - 2 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் Ezra in Tamil Bible - எஸ்றா தமிழ் வேதாகமம் Nehemiah in Tamil Bible - நெகேமியா தமிழ் வேதாகமம் Esther in Tamil Bible - எஸ்தர் தமிழ் வேதாகமம் ...

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் புத்தகம் குறித்த ஒரு பார்வை எரேமியா என்ற பெயருக்கு “கர்த்தர் வீசுகிறவர்” என்று அர்த்தம். பாருக்கு என்பவன் எரேமியாவுக்கு உதவியாக எழுத்தனாக இருந்து, எரேமியா சொல்லியற்றை எழுதி அதை தனது பாதுகாப்பில் வைத்திருந்து தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் செய்திகளையெல்லாம் தொகுத்தான்.(36:4,32,45:1) செப்பனியா, ஆபகூக், தானியேல், எசேக்கியேல் ஆகியோர் எரேமியாவின் சமகாலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள். பெரிய தீர்க்கதரிசிகள் வரிசையில் எரேமியா இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமானது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் ஏசாயாவைக்காட்டிலும் பெரியது, எசேக்கியேலைக்காட்டிலும் பெரியது, 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் சேர்க்கையைக்காட்டிலும் பெரியது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் வரலாறு, சுயசரிதை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். அதிகாரங்கள் 53 வசனங்கள் 1364 ஆக்கியோன் எரேமியா மற்ற எந்த தீர்க்கதரிசிகளின் புத்தகத்தை பார்க்கிலும் இதிலே தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் சொந்த வாழ்க்கை, அவனது ஊழியங்கள், அவனது செய்தியை கேட்டவர்களின் எதிர்வினைகள், அவனுக்கு நேர்ந்த சோதனைகள், அ...

Stick Maths - குச்சி கணக்கு | Jegan

ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட அளவை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்! சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க! மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான். சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்! வான சாஸ்திரி, பூகோள சாஸ்திரி, தத்துவவாதி, கவிஞன், சரித்திர ஆசிரியர், கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்... அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா? நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க. ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இர...