நியாயாதிபதிகள் விளக்கவுரை
நியாயாதிபதிகள்
வாசிக்க வேண்டிய அதிகாரங்கள் : நியாயாதிபதிகள் 1-4, 6-16
தலைப்பு
நியாயாதிபதிகள் என்ற தலைப்பு, யோசுவா மரணத்திற்குப் பின்பு தேவனால் (2:16) எழுப்பப்பட்ட இஸ்ரவேல் மக்களின் நடத்துனர்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய கிரேக்க மொழித்தலைப்பானது, “நீதிபதி கள்” என்று மாத்திரம் அர்த்தப்படுத்துவதாயிருக்கலாம். ஆனால் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒருக்காலும் எந்த ஒரு நீதி மன்றத்திலும் தலைமை வகித்திருந்ததில்லை. எபிரெய மொழியில் இந்தத் தலைப்பானது மிகவும் பொருள் விரிவானதாக உள்ளது, இது “நீதிபதிகள், ஆட்சியாளர்கள், விடுதலையாளர்கள்” என்று அர்த்தப்படுகிறது.
நியாயாதிபதிகளின் காலம் கொந்தளிப்பின் காலமாக இருந்தது. யோசுவாவின் மரணத்திற்குப் பின்பு, மைய அரசு எதுவும் இருக்கவில்லை; “அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானபடி செய்துவந்தான்” (17:6; 18:1; 19:1; 21:25).
அந்த நாட்டின் குடிகளை முற்றிலுமாகத் துரத்திவிடும்படி தேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கூறியிருந்தார், ஆனால் அவர்கள் அதைச் செய்ய வில்லை (1:21-36). அவர்களிடையில் இருந்த புறதெய்வ ஜனங்களின் செல் வாக்கினால் இஸ்ரவேல் மக்கள் தேவனை விட்டுப் புறம்பே திரும்பினார்கள். அவர்கள் இதைச் செய்தபோது, மற்ற மக்களினங்கள் வந்து இஸ்ரவேல் மக்களை அடக்கியாளத் தேவன் அனுமதித்தார். அவர்கள் (இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்பியபோது, தேவன் ஒரு விடுதலையாளரை, “ஒரு நியாயாதி பதியை” அனுப்பினார் (2:16-19). சற்றுக்காலம் மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தி ருப்பார்கள்; பின்பு அவர்கள் மீண்டும் விக்கிரகாராதனையில் வீழ்ந்து போவார்கள், பின்பு முன்கூறப்பட்ட செயல்கள் யாவும் திரும்பவும் நடைபெறும். மீண்டும் விழுந்துபோகுதல், தண்டனை பெறுதல், மனந்திரும்புதல் மற்றும் மீட்கப்படுதல் என்ற சுழற்சியானது திரும்பத் திரும்ப நடைபெற்றது.
நியாயாதிபதிகள் நாட்டை முழுவதும் ஆண்ட அரசர்களைப்போல் இருக்கவில்லை, மாறாக அவர்கள் குறிப்பிட்ட தேவைகளுக்காகத் தேவனால் எழுப்பப்பட்ட உள்ளூர் விடுதலையாளர்களாய் இருந்தனர். அனேகமாக அவர்களின் ஊழியமானது ஒன்றின்மீது இன்னொன்று கவிந்திருந்தது.
ஒருவர் நியாயாதிபதிகளின் புத்தகத்தை வாசிக்கும்போது, நாட்டில் வன்முறை மாத்திரமே இருந்தது என்ற கருத்து ஏற்படலாம்; ஆனால் ரூத் என்ற அமைதியும் இனிமையும் உடைய புத்தகமானது “நியாயாதிபதிகள் ஆண்ட நாட்களில்” நடைபெற்றதைக் குறிப்பதாக உள்ளது. கலகத்தின் மத்தியிலும் சாதாரண மக்கள் இன்னமும் தேவனுக்கு உண்மையுள்ள வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
தாவீது அரசரின் வம்சவழியை நிலைநாட்டுதல் (4:21, 22) மற்றும் நிறைவாக இயேசுவின் வம்சவழியை நிலைநாட்டுதல் (மத்தேயு 1:5, 6) என்பதே ரூத் புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகக் காணப்படுகிறது. இந்தப் புத்தகங்களை எழுதியது யார் என்று நாம் அறிவதில்லை; இஸ்ரவேல் மக்களின் கடைசி நிாயாதிபதியான சாமுவேல் இவற்றை எழுதியிருக்கலாம் என்பது நல்ல யூகமா யிருக்கும்.
நியாயாதிபதிகள் புத்தகத்தின் வரைகுறிப்பு பின்னணி: இஸ்ரவேல் மக்கள் (கானான் நாட்டின்) குடிகளை முற்றிலுமாகத் துரத்தியிருக்கவில்லை (1), இதனால் தேவன் அவர்கள்மீது பிரியமற்றுப் போனார். (2:1-5). கடும் தீமையான சுழற்சியொன்று தொடங்கிற்று (2:6-3:4).
- முதல் சுழற்சி.
- A விசுவாச விலக்கம் (3:5-7),
- மெசொப்பொத்தாமியர்களின்: அடக்குமுறைக்
- விடுவிக்கப்படுதல்: ஒத்னியேல் (3:9-11).
II இரண்டாம் சுழற்சி.
- விசுவாச விலக்கம் (3:12அ).
- அம்மோனியர்கள் மற்றும் அமலேக்கியர்களுடன் சேர்ந்து மோவாபியர்களின்: அடக்குமுறைக் கொடுமை (3:12ஆ-14).
- விடுவிக்கப்படுதல்: ஏகூத் (3:15-30).
III. மூன்றாம் சுழற்சி.
- அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள் (3:31).
- விடுவிப்பவர்: சம்கார் (3:31).
- நான்காம் சுழற்சி.
- விசுவாச விலக்கம் (4:1).
- அடக்குமுறைக் கொடுமை: கானானியர்கள் (4:2, 3),
- விடுவிப்பவர்கள்: தெபொராள் மற்றும் பாராக் (4:4-5:31),
- ஐந்தாவது சுழற்சி.
- A விசுவாச விலக்கம் (6:1அ).
- அடக்குமுறைக் கொடுமை: அமலேக்கியர்களுடன் சேர்ந்து மீதியா
னியர்கள் (6:1ஆ-10).
- விடுதலையாளர்: கிதியோன் (6:11-8:32).
- மீண்டும் விசுவாச விலக்கம் (8:33-35). E. அபகரிப்பாளன்: அபிமெலேக்கு (9).
- விடுதலையாளர்கள்: தோலா (10:1, 2) மற்றும் யாயீர் (10:3-5).
VI ஆறாம் சுழற்சி.
- விசுவாச விலக்கம் (10:6).
- அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள் மற்றும் அம்மோனி- யர்கள் (10:7-18).
- விடுதலையாளர்கள்: யெப்தா (11:1-12:7), இப்சான் (12:8-10), ஏலோன் (12:11, 12), மற்றும் அப்தோன் (12:13-15).
VII ஏழாம் சுழற்சி.
- விசுவாச விலக்கம் (13:1அ).
- அடக்குமுறைக் கொடுமை: பெலிஸ்தர்கள்
- விடுதலையாளர்: சிம்சோன் (13:2-16:31).
பிற்சேர்க்கை: ஒழுக்கச் சூழ்நிலை (17-21).
நியாயாதிபதிகள் புத்தகங்களில் இருந்து பாடங்கள்
மனிதன் தேவனுடைய வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாகத் தனது சொந்த வழியைப் பின்பற்றும்போது, குழப்பமே விளைகிறது. தேவன் தமது மக்களின் மத்தியில் பாவத்தை சகித்துக்கொண்டிருப்பதில்லை. நம்மைத் தட்டியெழுப்புவதற்காகத் தேவன் நம்மீது தண்டனையை அனுப்பலாம். நாம் மனந்திரும்பினால், தேவன் நம்மைத் திரும்பவும் ஏற்றுக்கொள்வார்.
நாம் நமது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். நாம் தவறினால், ஒரு தலைமுறையிலேயே சபையானது இழந்து போகப்படக்கூடும் (நியாயாபதிகள் 2:10-13ஐக் காணவும்).
நாம் உலகத்தில் மோசமான நிலையைக் கொண்டிருந்தாலும்,நகோமி, ரூத், மற்றும் போவாசு ஆகியோர் செய்ததைப் போன்று நாமும் நமது தேவனுக்கு உண்மை நிறைந்த வாழ்வை வாழ்ந்து அதன்மூலம் நமது கடமையை நிறைவேற்ற முடியும்.
தேவன் உலகத்திற்கு இயேசுவைக் கொண்டுவருதல் என்ற தமது திட்டத்தைத் தொடர்ந்தார் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது!
HOLY BIBLE TAMIL | +919444888727 | CHENNAI-48
கருத்துகள்
கருத்துரையிடுக