முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏசாயா புத்தகம் விளக்கவுரை Holy Bible Tamil

 

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம்

ஆக்கியோன்

ஏசாயா என்னும் பெயருக்கு “கர்த்தர் இரட்சிக்கிறவர்” அல்லது “இரட்சிப்பு கர்த்தருடையது” என்று அர்த்தம். “ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா” என்று விபரிக்கப்பட்டுள்ளது (1:12:1,13:1) ஆமோத்ஸ். யூதாவின் ராஜாவான யோவாகாசின் மகனான அமாசியாவின் சகோதரர்களில் ஒருவன் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. அவனுக்கு திருமணமாகி இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். ஒருவன் சேயார்யாசூப் (7:3) மற்றவன் மகேர்-சாலால்-அஷ்-பாஸ் (8:3)

சிங்காசன தரிசனத்தை அவன் கண்ட “உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில்,” என்று 6:1ல் குறிப்பிடப்படுகிற கிமு739ம் ஆண்டிலிருந்து அவனது ஊழியம் ஆரம்பித்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது.

உசியாவின் மரணம் சம்பவித்தபோது ஏசாயா இளைஞாயிருந்தான் என்று எடுத்துக்கொண்டால் அவனது மரணம் சம்பவித்த கிமு 680ல் அவனது வயது சுமார் 70 அல்லது 80தாக இருந்திருக்கலாம். ஆகவே சுமார் 60 ஆண்டுகள் ஜனங்களை கர்த்தரிடமாய் திருப்பும் ஊழியத்தை தீர்க்கதரிசி மேற்கொண்டான் என்று

கருதஇடமுண்டு. யூதாவின் நான்கு ராஜாக்களான உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோரின் நாட்களில் அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான்.

யூதர்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி மனாசே ஆட்சிக்கு வந்து சில ஆண்டுகளில் ஏசாயாவை கொலைசெய்தான்.

வேறோரு ஆதாரம் ஏசாயா மரத்தினால் செய்யப்பட்ட வாளினால் அறுத்துக் கொலைசெய்யப்பட்டான் (எஹி 11:37) என்று கூறுகிறது. இதன்படி பார்த்தால் ஏசாயா தீர்கதரிசன ஊழியம் செய்த காலம் சுமார் 30 ஆண்டுகள். (கிமு 739-690) வேதாகமத்தில் சங்கீதங்களின் புத்தகத்திற்கு அடுத்து பெரிய பகுதியை ஏசாயாவின் புத்தகம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

அதிகாரங்கள்: 66

வசனங்கள் 129

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தின் முக்கியத்துவம்

  • ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் அவனது காலத்தின் சம்பவங்கள் மற்றும் நபர்கள் சம்பந்தப்பட்டவைகளாகவும்,

முழுமனித இனத்தையும் பாதிக்கக்கூடிய எதிர்காலத்தின் சம்பவங்கள் சம்பந்தப்பட்டவைகளாகவும் இருந்தன.

  • அவனது பிரசித்திபெற்ற தீர்க்கதரிசனம் இரட்சகரின் பிறப்பை குறித்து 700 ஆண்டுகளுக்கு முன்னே உரைத்த “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” என்ற தீர்க்கதரிசனம் (7:14)
  • கிறிஸ்துவின் உவமைகளை காதாரக் கேட்டும் உணராதிருப்பார்கள் (ஏசாயா 6:910/மத்தேயு 13:13-15).
  • மேசியா ஜனங்கள் இடறுகிற கன்மலையாயிருப்பார் (ஏசாயா 8:14)
  • கிறிஸ்துவின் ஊழியம் கலிலேயாவில் ஆரம்பமாகும் (ஏசாயா 9:1-2/மத்தேயு 4:12-17)
  • இயேசு புறஜாதியாரை இழுத்துக் கொள்வார் (ஏசாயா 11:10/யோவான் 12:18-21),
  • இயேசுவின் ஊழியம் அற்புதங்ககள் நிறைந்ததாயிருக்கும் (ஏசாயா 35:5-6/மத்தேயு 11:2-6)
  • மேசியாவுக்கு முன்பாக வழியை ஆயத்தம் பண்ணுகிற ஒருவன் இருப்பான் (ஏசாயா 40:3-4/யோவான் 1:23
  • இயேசு புறஜாதியாரின் அமைதியுள்ள மீட்பர் (ஏசாயா 42:1-4/மத்தேயு 12:15–21)
  • இயேசு அசட்டைபண்ணப்பட்டவரும், கைவிடப்பட்டவருமாய் இருப்பார் (ஏசரியா 53:3/லூக்கா 4:28-29)
  • மேசியா பரியாசம் செய்யப்பட்டு உதாசீனப்படுத்தபடுவார் (ஏசாயா 50:3-6/மத்தேயு 27:27-31)
  • மேசியா நியாயத்தீர்ப்பு செய்யும் சகல அதிகாரத்தை உடையவராக இருப்பார் (ஏசாயா 22:22 / வெளி 3:7)
  • மேசியா தமது ஆவியை ஊற்றுவார் (ஏசாயா 44:3/யோவான் 16:7)
  • இயேசுவின் இரண்டாம் வருகையை முன்னறிவித்தான். அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும். சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும(ஏசாயா 24:23)

சுவாரசிய தகவல்கள்

  • ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலனவை கவிதை வடிவிலேயே எழுதப்பட்டுள்ளன
  • பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளில் புதிய ஏற்பாட்டில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டதும், அப்பியாசப்படுத்தபட்டதும் ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களே. எகிப்தின் மேல் வரவிருக்கும் காரியங்களை முன்னறிவிக்கும் அடையாளமாகவும், குறிப்பாகவும் கர்த்தரின் கட்டளையின்படி ஏசாயா .

வஸ்திரமில்லாமலும், வெறுங்காலாவும் மூன்று ஆண்டுகள் நடந்தான் (20:1-5)

  • எசேக்கியாவின் மரணத்திற்கேதுவான காயம் குணமடைந்து அவன் உயிர்பிழைக்க அத்திப்பழத்தில் செய்யப்பட்ட மருந்தை ஏசாயா பயன்படுத்த சொன்னான் (38:21)
  • • எசேக்கியாவின் காலத்தில் அசீரிய பேரரசனான சனகெரிப் யூதா மீது படையெடுத்து வந்தபோது அவன் வெற்றிபெறாமலும், சிறைப்படுத்திக்கொண்டு போகாமலும் இருக்க ஏசாயா உதவினான்.
  • பெர்சியாவின் ராஜாவான கோரேஸுக்கான செய்தியை பெர்சிய இராஜ்யம் பேரரசாக உருவாகியிருப்பதற்கும், கோரேஸு பிறப்பதற்கு முன்னே ஏசாயா தீர்க்கதரிசனமாய் சொல்லியிருந்தான். (44:28,45:1-6)
  • ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் ஒரு சிறிய அளவிலான வேதாகமம் போன்றது.
  • முதல் 39 அதிகாரங்களும் (பழைய ஏற்பாட்டைப்போல) தேவனுடைய நியாயத்தீர்ப்பை சொல்லுகிறது. இறுதி 27 அதிகாரங்கள் (பழைய ஏற்பாட்டைப்போல) நம்பிக்கையின் நற்செய்தியை சொல்லுகிறது.
  • ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் “இரட்சிப்பு” என்னும் சொல்லானது 26 தடவைகள் வருகிறது. மற்ற தீர்க்கதரிசனப்புத்தகங்கள் யாவையும் சேர்த்துப் பார்த்தால் 7 தடவைகள் மாத்திரமே வருகிறது.
  • இயேசு நாசரேத்துக்குச் சென்று ஒய்வுநாளில் ஜெபாலயத்திற்கு சென்று வாசிக்க எழுந்து நின்றபோது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் அதை வாசித்த பின்பு “இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்” (லூக்கா 4:16-21)

யெகோவா தேவனைக் குறித்து ஏசாயா சொன்ன இரண்டு விஷேச பெயர்கள்

  1. “சேனைகளின் கர்த்தர்”இது 62 தடவைகள் இந்த புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
  2. “இஸ்ரவேலின் பரிசுத்தர்” இது 25 தடவைகள் இந்த புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

வரலாற்றுப் பின்னணி

  • தேவன் சொன்ன காரியங்களுக்கு தங்கள் காதுகளை அடைத்துக்கொண்ட தேசத்திற்கு கிமு 739-681 வரை ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தான். யூதா தேசமானது தாழ்மையோடு தேவனை சேவித்து, தங்கள் அயலகத்தாரை அன்பு செய்வதை விடுத்து எருசலேமில்

தேவனுடைய ஆலயத்தில் அர்த்தமற்ற பலிகளை செலுத்திக்கொண்டிருந்தது.

  • தேசம் முழுவதும் அநீதியின் காரியங்கள் நடந்தன.
  • யூதா ஜனங்கள் தேவனுக்கு தங்கள் முதுகைக்காட்டி அவரைவிட்டு தூரமாய் போனார்கள். ஆகவே அவர்கள் மீதான தண்டனை அறிவிக்கப்பட்டது.
  • யூதா தேசத்திற்கு அது பெரும் அரசியல் குழப்பத்தின் காலம்.
  • அசீரியா இராஜ்யம் தனது எல்லைகளை விரிவுபடுத்தி வடபகுதியில் இருந்த இஸ்ரவேலைமீதும், சீரியாவின்மீதும் தாக்குதல் நடத்தியது.
  • அசீரியாவுக்கு எதிராக இஸ்ரவேலோடும், சீரியாவோடும் யூதா கூட்டுச்சேர மறுத்ததால் இஸ்ரவேலும், சிரியாவும் பழிவாங்கும் நோக்கத்தோடு யூதாவை தாக்கின.
  • அசீரியாவிடம் தனக்காக உதவிகேட்கலாம் என்று தீவீரமாக யூதா ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, ராஜாவையும், ஜனங்களையும் கர்த்தர் மேல் மாத்திரமே நம்பிக்கை வைக்கும்படி ஊக்கப்படுத்தியவன் ஏசாயா.
  • யூதாவின் ராஜாவான ஆகாஸ் ஏசாயாவின் ஆலோசனையை புறந்தள்ளி அசீரியாவை உதவிக்கு அழைத்தான்.
  • ஆசீரியா சம்மதித்து வந்தது. இஸ்ரவேலின் தலைநகரான சமாரியா கிமு 722ல் அசீரியாவின் கைவசமானது.
  • அசீரியாவின் அடுத்த இலக்கு யூதா என்பது சீக்கிரத்தில் தெரியவந்தது.
  • யூதா தெற்கிலுள்ள எகிப்தின் உதவியை நாடியது.
  • மீண்டும் ஏசாயா எந்த நாட்டோடும் கூட்டுச்சேராமல் கர்த்தரை மாத்திரமே நோக்கிப்பார்க்கும்படி அறிவுரை கூறினான்.
  • ராஜாவாகிய எசேக்கியா ஏசாயாவிற்கு செவிகொடுத்தான். அதனால் கர்த்தர் அவனது விசுவாசத்தை கனப்படுத்தி அசீரியரை அழித்தார் (அத-36-37)
  • ஆனால் எசேக்கியா ஒரு பலவீனமான தருணத்தில் அசீரியாவின் எதிரியாயிருந்த பாபிலோனிய ஸ்தானபதிகளுக்கு தனது
  • பொக்கிஷங்களை பார்வையிட அனுமதித்தான் (39:1-2)
  • இதையறிந்த ஏசாயா ராஜாவின் பொக்கிஷங்களும் அவன் வாரிசுகளும் பாபிலோனுக்கு கொண்டுபோகப்படும் என்று முன்னறிவித்தான் (39:5-7)
  • ஏசாயாவின் தீர்க்கதரிசன ஊழியத்தின் ஆரம்பகட்டத்தில் இஸ்ரவேலின் அரசும், யூதாவின் அரசும் அதன் ஆட்சியின் உச்சத்தில் இருந்தன.
  • இந்த இரண்டு அரசுகளும் கிட்டதட்ட சாலொமோனின் கைவசம் இருந்த பிரதேசங்களை ஆண்டுகொண்டிருந்தன.
  • அவர்கள் செல்வமும், செழிப்பும் உள்ளவர்களாயிருந்தார்கள். சிரியா இல்லாமல் போயிருந்தது: எகிப்து பலவீனப்பட்டிருந்தது: அசீரியா அச்சுறுத்தலாயிருக்கவில்லை: பாபிலோன் இன்னும் கண்களுக்கு தென்படவில்லை. .
  • ஆனால் ஏசாயாவின் வாழ்வின் இறுதிக்கட்டத்தில், இஸ்ரவேல் இல்லாமல் போயிற்று: யூதாவோ அசீரியாவோடு ஒப்பிடுகையில் “சிறுபூச்சி” போன்று பரப்பளவில் குறுகிப்போயிருந்தது.
  • இந்த காலகட்டத்தில்தான் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் பல தீர்க்கதரிசிகளை அனுப்பினார்.
  • ஓசியா (கிமு 750-725) வடக்கின் பத்துகோத்திரமான இஸ்ரவேலுக்கே அதிகமாக தீர்க்கதரிசனம் உரைத்தான்.
  • மீகா (கிமு 735-700). ஏசாயா ஆகிய இருவரும் தெற்கின் இருகோத்திரமான யூதாவை முக்கியப்படுத்தியே தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.
  • தீர்க்கதரிசிகளின் செய்திகள் அழிவையும், மீளுருவாக்கத்தையும் சொல்லின.
  • பலதடவைகள் நியாயப்பிரமாணத்தை மேற்கோள்காட்டி இஸ்ரவேல் அதைவிட்டு விலகினதால் வரவிருக்கும் தண்டனை குறித்து எச்சரித்தார்கள்.

இந்தப் புத்தகத்தின் இரண்டு பிரதான பிரிவுகள்

  1. அசீரியர்களின் காலம் (அதி 1-39)
  2. பாபிலோனியர்களின் காலம் (அதி 40-66) 

பாபிலோனிய சிறையிருப்பின் காலத்தில் ஏசாயா வாழ்ந்திருக்கவில்லை என்றாலும் இஸ்ரவேலின் வரலாற்றின் அவர்கள் அனுபவிக்கப்போகும் அந்த கடினமான காலகட்டத்திற்கான ஆறுதலின் வார்த்தைகளை அவன் தீர்க்கதரிசனமாக உரைத்திருந்தான்.

இந்தப் புத்தகத்தின் இரண்டு கருத்துருக்கள்

1.ஏற்றகாலத்தில் மேசியா மகிமையோடு வருவார்

ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் பலவும் இயேசுவில் நிறைவேறியதால் அவர் “இரட்சிப்பின் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்பட்டார்.

ஏசாயா அடிக்கடி வரவிருக்கும் காரியங்கள் குறித்தே பேசினார்.

புறஜாதியாரின் இராஜ்யங்கள் வீழும் என்பதையும் மேசியா ஆளும் நீதியும் உண்மையுமான இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்பதையும் முன்னறிவித்தார் (2:15)

2.இஸ்ரவேலின் பரிசுத்தரை நம்புங்கள்

ஏசாயாவின் பணியானது எதிர்காலத்தை எடுத்துரைப்பது மாத்திரமல்ல. அவனது காலத்து ஜனங்களுக்கு கர்த்தருடைய வார்த்தையை எடுத்துரைப்பதும் அவனது பணியாகவிருந்தது.

கர்த்தர் மீது வைக்கும் விசுவாசம் அவர்களுக்கு, அவர்களது மீறுதல்களுக்கான மன்னிப்பையும், எதிரிகளிடமிருந்து விடுதலையையும் பெற்றுதரும் என்பது அவனது செய்தி.

8 தடவைகள் “கர்த்தருக்கு காத்திருக்கும்படி” ஜனங்கள் வலியுறுத்தப்பட்டார்கள் (40:28-31

மூன்று பெயர்களும் அதன் முக்கியத்துவமும்

  1. ஏசாயாவின் குமாரன் மகேர்-சாலால்-அஷ்-பாஸ்
  • அர்த்தம்: சீக்கிரத்தில் அழி, விரைவாய் கொள்ளையிடு
  • அசீரியாவைக்கொண்டு கொடுக்கப்போகும் தண்டனை உடனடியாக இருக்கப்போகிறது.
  • அசீரியா யூதாவை தாக்கியபோது பசிகொண்ட மிருகத்தைப்போல அதை விரைவாக கொள்ளையிட்டார்கள்.
  1. ஏசாயாவின் குமாரன் சேயார்யாசூப்
  • அர்த்தம்: மீதியுள்ளவர்கள் திரும்பி வருவார்கள்
  • இது ஒரு நம்பிக்கையை தந்தது.
  • மோசேயின் உடன்படிக்கையை மீறியதால் அதில் சொல்லப்பட்டிருந்த சாபத்தின்படி யூதா இறுதியில் நாடுகடத்தப்பட்டது (உபா 28:36)
  • ஆனாலும் தேவன் இறுதியில் சிறிய அளவிலான ஜனத்தை நாடு திரும்பபண்ணுவார்.
  1. ஏசாயாவின் பெயர்
  • அர்த்தம்:”கர்த்தர் இரட்சிக்கிறவர்”
  • கன்னியிடம் பிறக்கப்போகும் மிகப் பெரிய மிக முக்கியமான குமாரன் இருக்கிறார் (9:6)
  • அவர் தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து சதாகாலம் ஆளுகை செய்வார் (9:7)
  •  அவர் உண்மையையும்(9:2) மகிழ்ச்சியையும் (9:3) விடுதலையையும்(9:4) பாதுகாப்பையும் (9:5) அருளுவார்

இந்தப் புத்தகத்தின் சுருக்கம்

தண்டனை (கவிதை) அதி 1-35 

1)சிங்காசனத்தில் வீற்றிருப்பவரின் சர்வ அதிகாரத்தின் வெளிப்பாடு

  • (1) இஸ்ரவேலுங்கெதிரான குற்றச்சாட்டை வழக்குமன்றத்திற்கு வந்து கேட்கும்படியாக ஒரு கம்பீரமான அழைப்பு – அதி 1 
  • (2) யூதாவினதும் எருசலேமினதும் எதிர்காலம் குறித்த முன்னோட்டம் – அதி 2
  • (3) யூநாவினதும் எருசலேமினதும் தற்போதைய நிலை – அதி 3
  • (4) எதிர்காலம் குறித்த இன்னொரு முன்னோட்டம் – அதி 4 
  • (5) திராட்சைதோட்டம் குறித்த உவமையும் இஸ்ரவேலின் மீது வரவிருக்கும் தண்டனைகளும் அதி 5
  • (6) ஏசாயா தனிப்பட்ட முறையில் அழைக்கப்படுதலும், தீர்க்கதரிசியாக பணியமர்த்தபடுதலும் அதி 6
  • (7) உள்ளூர் நிகழ்வுகளும் தூரத்து நிகழ்வுகளும் · அதி 7-10 (வரவிருக்கும் பிள்ளையினால் உண்டாகும் எதிரகால நம்பிக்கை)
  • (8) ஆபிரவருட அரசாட்சி – அறி 11-12
  • (9) சுற்றியுள்ள தேசங்களின்மீது உண்டாகும் தண்டனைகள் (பெரும்பாலும் நிறைவேறியது) அதி|3.23 T)பாபிலோள் பாழாக விடப்படும் (13:1-14-27)

 2) பெலிஸ்தியா பேரழிவால் சுதறும் (1428-32)

3)மோவாப் அழிவினால் புலம்பும் (15:1-1614),

 4)தமஸ்குவும், சமாரியாவும் வாதையை காணும் (17:1-14). 

5)எதியோப்பியா அழிக்கப்படும் ஆனாலும் வழி உண்டாகும் (181-7)

6)எகிப்து கலங்கி நிற்கும் (19:1-20:6) 

7)பாபிலோவின் வீழ்ச்சி மீண்டும் வலியுறுத்தப்படும் (21:1-10) 

8)ஏதோம் மிரட்டப்படும் (21:11-12)

9)அரபியாவின் அழிவின் காலம் குறிக்கப்படும் 21:13-17)

10)எருசலேமுக்குள் படைகள் நுழையும் (21:1-25) 

11)திரு கவிழ்க்கப்படும் (23:1-18)

12) இராஜயம் இந்த பூமியில் ஸ்தாபிக்கப்படுவதற்கான திட்டமும்,வழிமுறையும் அதி 24-34 

13)இராஜ்யத்தால் இம்மையில் உண்டாகும் ஆயிரவருட ஆசீர்வாதம் அதி 35

வரலாற்று இடைவேளை (உரைநடை) அதி 36-39

(இந்தப்பகுதி பெரிய உபத்திரவகாலத்தில் தேவன் தமது ஜனங்களை எவ்வாறு விடுவிக்கப்போகிறார் என்பதின் தீர்க்கதரிசன காட்சி. 2இரா அதி18,19: 2நாளா அதி 29.30 பார்க்கவும்)

(1) எசேக்கியா ராஜாவும், அசீரிய ராஜாவான சனகெரிப்பின் படையெடுப்பும் அதி 36

 (2) எசேக்கியாவின் ஜெபமும் அசிரியப்படைகளின் அழிவும் அதி 37 

(3) எசேக்கியாவின் வியாதியும். விண்ணப்பமும். சுகம்பெறுதலும் அதி 38

(4) எசேக்கியாவின் மதியின் செய்கை அதி 39

இரட்சிப்பு (கவிதை) அதி 40-66 இரட்சகரின் பாடுகள்

(1) அடிமையின் மூலமாக வரும் யெகோவாவின் ஆறுதல் அதி 40-48 (விக்கிரக வழிபாட்டுக்கெதிரான விவாகம். அடிமையின் மூலமாய் வரும் உதவியும், நம்பிக்கையும்)

(2) பாடுபடும் அடிமையின் மூலமாக வரும் யெகோவாவின் இரட்சிப்பு அதி 49-57 1)தேவனின் அடிமையான சர்வ உலகின் இரட்சகர் 49:4-52:12 2)தேவனின் ஆடான பாடுபடும் அடிமையினால் உண்டாகும் இரட்சிப்பு 52-13-53.12

3)தேவனின் ஒரே இரட்சகரினால் உண்டாகும் மீட்பர் அனிக்கும் மீட்பு

அதி 54-57

பாடுபடும் அடிமையின் மூலமாக வரும் யெகோவாவின் மகிமை அதி 58-66

1) தேவனின் மகிமை வெளிப்படாதபடி தடுக்கும் பாவம் அதி 58-59 

2) மீட்பர் சியோனில் எழுந்தருளுதல் அதி 60-66

(தேவனின் திட்டத்தை எதுவும் நடுக்கமுடியாது. அவர் பாவத்தை நியாயந்தீர்ப்பார்)


ஏசாயா | Holy Bible Tamil | +919444888727 | Jegan - +919444414229

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Tamil Bible Picture - தமிழ் வேதாகமம் ( தமிழ் பைபிள் 66 ஆகமங்கள் )

Genesis in Tamil Bible - ஆதியாகமம் தமிழ் வேதாகமம் Tamil Bible Exodus - யாத்திராகமம் தமிழ் வேதாகமம் Levity in Tamil Bible - லேவியராகமம் வேதாகமம் Numbers in Tamil Bible - எண்ணாகமம் தமிழ் வேதாகமம் Ubagamam in Tamil Bible - உபாகமமம் தமிழ் வேதாகமம் Tamil Bible - Judges நியாயாதிபதிகள் தமிழ் வேதாகமம் Ruth in Tamil Bible - ரூத் தமிழ் வேதாகமம் ISamuel in Tamil Bible | 1 சாமுவல் தமிழ் வேதாகமம் 2 Samuel in Tamil Bible - 2 சாமுவேல் தமிழ் வேதாகமம் 1 Deuteronomy in Tamilbible - 1 நாளாகமம் தமிழ் வேதாகமம் Joshua in Tamil Bible -  தமிழ் வேதாகமம் 2 Deuteronomy in Tamil Bible - 2 நாளாகமம் தமிழ் வேதாகமம் 1 Kings in Tamil Bible - 1 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் 2 Kings in Tamil Bible - 2 இராஜாக்கள் தமிழ் வேதாகமம் Ezra in Tamil Bible - எஸ்றா தமிழ் வேதாகமம் Nehemiah in Tamil Bible - நெகேமியா தமிழ் வேதாகமம் Esther in Tamil Bible - எஸ்தர் தமிழ் வேதாகமம் ...

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம்

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் புத்தகம் குறித்த ஒரு பார்வை எரேமியா என்ற பெயருக்கு “கர்த்தர் வீசுகிறவர்” என்று அர்த்தம். பாருக்கு என்பவன் எரேமியாவுக்கு உதவியாக எழுத்தனாக இருந்து, எரேமியா சொல்லியற்றை எழுதி அதை தனது பாதுகாப்பில் வைத்திருந்து தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் செய்திகளையெல்லாம் தொகுத்தான்.(36:4,32,45:1) செப்பனியா, ஆபகூக், தானியேல், எசேக்கியேல் ஆகியோர் எரேமியாவின் சமகாலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள். பெரிய தீர்க்கதரிசிகள் வரிசையில் எரேமியா இடம்பெற்றிருப்பது மிகப் பொருத்தமானது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் ஏசாயாவைக்காட்டிலும் பெரியது, எசேக்கியேலைக்காட்டிலும் பெரியது, 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புத்தகங்களின் சேர்க்கையைக்காட்டிலும் பெரியது. எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் வரலாறு, சுயசரிதை, தீர்க்கதரிசனம் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். அதிகாரங்கள் 53 வசனங்கள் 1364 ஆக்கியோன் எரேமியா மற்ற எந்த தீர்க்கதரிசிகளின் புத்தகத்தை பார்க்கிலும் இதிலே தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் சொந்த வாழ்க்கை, அவனது ஊழியங்கள், அவனது செய்தியை கேட்டவர்களின் எதிர்வினைகள், அவனுக்கு நேர்ந்த சோதனைகள், அ...

Stick Maths - குச்சி கணக்கு | Jegan

ஒரு குச்சியோட நிழலை வச்சு, ஒரு கிரகத்தோட அளவை முதன்முதலா கணிச்சவன் இந்த எரடோஸ்தனிஸ் தான்! சுமார் 2,200 வருஷங்களுக்கு முன்னாடி, ஒரு மனுஷன் ஒரு குச்சியையும் நிழலையும் வச்சு பூமியோட சைஸை அளந்தான் பாருங்க! மூணாம் நூற்றாண்டுல, எகிப்துல இருந்த அலெக்சாண்டிரியான்னு ஒரு ஊர்ல எரடோஸ்தனிஸ்ன்னு ஒருத்தன் இருந்தான். சில பேரு அவனை "பீட்டா"ன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கலாம். ஏன்னா அவன் எதுலயுமே ரெண்டாவதா இருப்பானாம். ஆனா அறிவைப் பொறுத்தவரைக்கும் அவன் தான் நம்பர் ஒன்! வான சாஸ்திரி, பூகோள சாஸ்திரி, தத்துவவாதி, கவிஞன், சரித்திர ஆசிரியர், கணித மேதை, அலெக்சாண்டிரியாவுல இருந்த பெரிய நூலகத்தோட தலைவன்... அடேங்கப்பா! ஒரு மனுஷன் இவ்வளவு விஷயத்துல கெட்டிக்காரனா? நம்ம மறுமலர்ச்சிக் காலத்துக்கு எத்தனையோ வருஷம் முன்னாடியே இப்படி ஒருத்தன் இருந்திருக்கான் பாருங்க. ஒரு நாள், ஒரு சுருள்ல அவன் படிச்சான்: சியென்னேன்னு (இப்போதைய அஸ்வான்) ஒரு ஊர்ல, ஜூன் 21ஆம் தேதி, அதாவது வெயில் காலம் ஆரம்பிக்கிற அன்னிக்கு, மத்தியானம் ஒரு குச்சியை நேரா நட்டு வச்சா நிழலே விழுகாதாம். சூரியன் அப்படியே நேருக்கு நேரா மேல இர...